96

சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படத்தின் முன்னோட்டம்.
96
Published on

‘ரோமியோ ஜூலியட்’ , ‘கத்திசண்டை’ படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘96’.

இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், வினோதினி நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம், இசை - கோவிந்த் மேனன், எடிட்டிங் - கோவிந்த ராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - உமாதேவி, கார்த்திக் நேத்தா, எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார். பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர் இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகிறார்.

இந்த படத்திற்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் உள்ள ஸ்பிட்டிவேலி ஆகிய இடங்களில் விஜய்சேதுபதி தொடர்பான பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. ராஜஸ்தான், கல்கத்தா போன்ற இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

2-ம்கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடக்கிறது. அதில் விஜய்சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிறது.

படம் பற்றி கூறிய இயக்குனர் பிரேம்குமார்...

“ இதுவரை விஜய்சேதுபதி நடித்த படங்களுக்காக இவ்வளவு வேறுபட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த படத்தில் அவ்வளவு லொக்கே‌ஷன்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு டிராவலிங் சம்பந்தப்பட்ட கதை என்பதால் 30 லொகே‌ஷன்கள் தேவைப்படுகிறது” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com