2 வாரங்களில் அடுத்தடுத்து வெளியாகும் 7 படங்கள்

திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து புதுப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்த 2 வாரங்களில் மட்டும் 7 படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Irumbuthirai #IAMK
2 வாரங்களில் அடுத்தடுத்து வெளியாகும் 7 படங்கள்
Published on

திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு புதிய படங்கள் திரைக்கு வரத் தொடங்கியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ‘மெர்க்குரி’, புதுமுகங்கள் நடித்த ‘முந்தல்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.

நேற்று விக்ரம் பிரபு நடித்த ‘பக்கா’, சாய்பல்லவி நடிப்பில் ‘தியா’, ‘பாடம்’ படங்கள் திரைக்கு வந்துள்ளன. வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கவுதம் கார்த்திக் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, புதுமுகங்கள் நடிப்பில் ‘அலைபேசி’, ‘காத்திருப்போர் பட்டியல்’ படங்கள் வர தயாராகின்றன.

மே 11-ந் தேதி பிரபல நாயகர்களின் 4 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதில் சாவித்ரியின் வாழ்க்கை படமான ‘நடிகையர் திலகம்’ மே 9-ஆம் தேதி ரிலீசாகிறது. விஷால் நடித்துள்ள ‘இரும்புத்திரை’, அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்கள் மோதுகின்றன. இந்த படங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

தற்போது, முன்பதிவின் அடிப்படையில் எந்தெந்த படங்களை எந்த தேதியில் வெளியிட வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்கிறது. இதற்காக இந்த சங்கத்தில் திரைப்பட ஒழுங்குபடுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஒப்புதல் பெற்ற பிறகே படங்கள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படுகிறது. #Irumbuthirai #IAMK

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com