சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் `வேலைக்காரன்' படக்குழு

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்று மாலை இன்ப அதிர்ச்சி கொடுக்க `வேலைக்காரன்' படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் `வேலைக்காரன்' படக்குழு
Published on

சமீபத்தில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. கைப்பற்றியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு சோனி மியூசிக் சவுத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.

அதேநேரத்தில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com