

இந்த ஆண்டு இதுவரை 27 படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. ஜனவரி மாதம் ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘ஸ்கெட்ச்’, ‘குலேபகாவலி’, ‘நிமிர்’, ‘மதுரவீரன்’, ‘மன்னர் வகையறா’ உள்பட 13 படங்கள் வந்தன.
பிப்ரவரியில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, ‘மதுர வீரன்’, ‘கலகலப்பு-2’, ‘சவரக்கத்தி’, ‘சொல்லி விடவா’, ‘படைவீரன்’, ‘நாச்சியார்’, ‘நாகேஷ் திரையரங்கம்’,‘வீரா’,‘மனுஷனா நீ’, ‘மேல்நாட்டு மருமகன்’ உள்பட 14 படங்கள் வெளிவந்துள்ளன.
ஜனவரியில் வந்த படங்களில் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, விமலின் மன்னர் வகையறா’ ஆகியவை ஒரளவு ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. பிப்ரவரியில் வந்த படங்களில், ‘கலகலப்பு-2’, ‘நாச்சியார்’, ‘சவரக்கத்தி’ உள்ளிட்ட சில படங்கள் பேசப்படும்படி அமைந்தன.
இந்த நிலையில், வருகிற வெள்ளிக்கிழமை (23-ந்தேதி) மட்டும் ‘6 அத்தியாயம்’, ‘காத்தாடி’, ‘பேய் இருக்கா இல்லையா’, ‘ஏண்டா தலையில எண்ணை வெக்கல’, ‘மெர்லின்’ ஆகிய 6 படங்கள் மோதுகின்றன. இவை அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள். இதில் ‘கேணி’ படத்தில் நாசர், பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். முன்னதாக 22-ந் தேதி ‘கூட்டாளி’ படம் ரிலீஸ் ஆகிறது. எனவே, இந்தவாரம், மொத்தம் 7 படங்கள் மோதுகின்றன.