இந்த வாரம் கடும் போட்டியில் 4 படங்கள்

போராட்டம் முடிந்து படங்கள் ரிலீசுக்கு படையெடுத்து வரும் நிலையில், இந்த வார ரிலீசில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’ உள்ளிட்ட 4 படங்கள் ரிலீசாக இருக்கிறது. #IAK #Irumbuthirai
இந்த வாரம் கடும் போட்டியில் 4 படங்கள்
Published on

திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 50 நாட்கள் புதிய படங்கள் திரைக்கு வரவில்லை. இதனால் ஏராளமான படங்கள் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது முன்பதிவு பதிவு அடிப்படையில் படங்கள் திரைக்கு வருகின்றன. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் தனி குழு அமைக்கப்பட்டு அவர்களுடைய அங்கீகாரத்துடன் வாரந்தோறும் 3 அல்லது 4 படங்கள் திரைக்கு வருகின்றன. 

வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ‘மெர்குரி’, ‘முந்தல்’, ‘தியா’, ‘பாடம்’, ‘பக்கா’, ‘அலைபேசி’, ‘காத்திருப்போர் பட்டியல்’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன.

வருகிற 11-ந்தேதி முக்கிய படங்கள் திரைக்கு வருகின்றன. விஷால்-சமந்தா நடித்துள்ள ‘இரும்புத்திரை’, அரவிந்தசாமி - அமலாபால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, அருள்நிதி - மகிமா நம்பியார் நடித்திருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, இவை தவிர கீர்த்தி சுரேஷ், சமந்தா, துல்கர்சல்மான் நடித்துள்ள மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்‘ ஆகிய படங்கள் களம் இறக்கப்படுகின்றன.

இந்த 4 படங்களும் நடிகர்கள், கதையம்சம் ஆகியவற்றின் அடிப்படையில் முக்கிய படங்களாக கருதப்படுகின்றன. எனவே வருகிற படங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IAK #Irumbuthirai #NadigaiyarThilagam

X

Maalai Malar
www.maalaimalar.com