காட்டேரி படத்தில் வைபவ் ஜோடியாகிய 3 நாயகிகள்

`ஆர்.கே.நகர்' படத்தை தொடர்ந்து டீகே இயக்கத்தில் வைபவ் நடித்து வரும் ‘காட்டேரி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மூன்று நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளனர். #Katteri #Vaibhav
காட்டேரி படத்தில் வைபவ் ஜோடியாகிய 3 நாயகிகள்
Published on

`மேயாத மான்' படத்திற்கு பிறகு வைபவ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் `ஆர்.கே.நகர்'. படப்பிடிப்பு முடிந்து இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து வைபவ் அடுத்ததாக ‘காட்டேரி’ என்ற படத்தில் நடிக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தை ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களை இயக்கிய டீகே இயக்குகிறார். வைபவ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா மற்றும் `கப்பல்' படத்தில் வைபவ் ஜோடியாக நடித்த சோனம் பஜ்வா நடிக்கின்றனர். 

கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூடியூப்’ புகழ் சாரா உள்பட பலரும் நடிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. 

‘யாமிருக்க பயமே’ படத்திற்கு இசையமைத்த எஸ்.என்.பிரசாத் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. படத்தை வருகிற டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Katteri #Vaibhav

X

Maalai Malar
www.maalaimalar.com