அருள்நிதி, விஷ்ணு விஷால் படங்களை வெளியிடும் 24 PM ஸ்டூடியோஸ்

ஆர்.டி.ராஜாவின் 24 AM ஸ்டூடியோஸ் தற்போது 24 PM ஸ்டூடியோஸ் மூலம் படங்களை விநியோகம் செய்ய தொடங்கி இருக்கிறது.
அருள்நிதி, விஷ்ணு விஷால் படங்களை வெளியிடும் 24 PM ஸ்டூடியோஸ்
Published on

ஆர்.ராஜாவின் அந்த நிறுவனத்திற்கு 24 PM ஸ்டூடியோஸ் என பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்து ஆர்.டி.ராஜா பேசும் போது,

'' சினிமாவின் ஒரு முக்கிய அம்சம் விநியோகம். எந்த வித ஒளிவு மறைவும் இல்லாத எங்களது அணுகுமுறையை கொண்டு சினிமா வினியோகத்தில் கால் பாதிக்கவுள்ளோம். 'அக்சஸ் பிலிம் பேக்ட்ரி' நிறுவனத்தின் சார்பாக அருள்நிதி நடிக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் உருவாகி வரும் `ராட்சஸன்' ஆகிய படங்களோடு எங்கள் விநியோகம் பயணத்தை தொடங்கவுள்ளோம்.

திரு. டில்லி பாபுவோடு இணைந்து எங்கள் விநியோகத்தை ஆரம்பிப்பதில் மகிழ்ச்சி. சமீபத்தில் 'மரகத நாணயம்' படத்தின் மூலம் வசூலை குவித்த அவருக்கு, இது போல மேலும் நிறைய தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் முனைப்பும் உள்ளது.

விநியோகத்துறையிலும் நாங்கள் கடுமையாக உழைத்து சாதிக்க முனைப்போடு உள்ளோம்'' என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com