

‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் - சூரி - டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 17-ஆம் தேதி(நாளை) படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு சீமத்துரை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து, இந்த படத்தையும் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.