100 சதவீதம் காதல் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

சந்திரமவுலி எம்.எம். இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `100 சதவீதம் காதல்' படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே
ஜி.வி.பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே
Published on

நாகசைதன்யா - தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது. 

சந்திரமவுலி எம்.எம். இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்' விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் பாடல்கள் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து படமாக உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்திற்கு கணேஷ்.ஆர் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com