ஜி.வி.பிரகாஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு

சந்திரமவுலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் `100 சதவீதம் காதல்' படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #100PercentKaadhal #GVPrakashKumar
ஜி.வி.பிரகாஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு
Published on

நாகசைதன்யா - தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது.

சந்திரமவுலி எம்.எம். இயக்கியிருக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்' விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தணிக்கைக் குழுவில் படத்திற்கு `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு 2019 பிப்ரவரியில், படம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து படமாக உருவாக்கி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கணேஷ்.ஆர். ஒளிப்பதிவை கவனித்துள்ளார். #100PercentKaadhal #GVPrakashKumar #ShaliniPandey

X

Maalai Malar
www.maalaimalar.com