Billa(4 / 5)
நடிகர் அஜித்குமார்,நயன்தாரா,நமிதா, பிரபு நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் 'பில்லா' ஆகும்.
இதற்குமுன் பழம்பெரும் இயக்குனர் மறைந்த கே.பாலாஜி இயக்கத்தில் ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான 'பில்லா' திரைப்படத்தை யொட்டி சில மாற்றங்களுடன் இந்த படம் எடுக்கப்பட்டது ஆகும்.
இப்படத்தில் நடிகர் அஜித்குமார் இரட்டைவேடத்தில் நடித்து உள்ளார். இதன் முக்கிய காட்சிகள் மலேசியா லேங்காவி தீவு பகுதியிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டன. இப்படம் 2006-ல் வெளியான 'வரலாறு' பட வசூலை முறியடித்தது.ரூ.64 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

