வாகனங்கள் விற்பனைக்கு புதிய வலைதளம் துவங்கிய யமஹா

இந்தியாவில் வாகனங்கள் விற்பனைக்கென யமஹா நிறுவனம் புதிய வலைதளத்தை துவங்கி உள்ளது.
யமஹா ஆன்லைன் தளம்
யமஹா ஆன்லைன் தளம்
Published on

யமஹா நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய புதிய வலைதளத்தை துவங்கி உள்ளது. வாடிக்கையாளர்கள் மிக எளிதில் இயக்க ஏதுவாக புதிய வலைதளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த வலைதளத்தில் சென்னையில் இருந்து துவங்கி  உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க இயங்கி வரும் சுமார் 300 விற்பனையகங்களை  ஆன்லைன் விற்பனை முறைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக யமஹா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்நிலையில், யமஹா துவங்கி உள்ள புதிய விர்ச்சுவல் ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை 360 டிகிரி கோணத்தில் காண்பிக்கிறது. இத்துடன் சிறப்பம்சங்களை யமஹா வாகனங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிய திட்டம் துவங்கப்பட்டு இருப்பதால் வாடிக்கையாளர்கள் விற்பனையகம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் யமஹா சமூக விலகலை பின்பற்றி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான டெலிவரி முறையை பின்பற்றுவதாக தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com