வாகனங்களுக்கு ரூ. 2.8 லட்சம் வரை சலுகை அறிவித்த டிரையம்ப்

டிரையம்ப் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக தேர்வு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ரூ. 2.8 லட்சம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர்
டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர்
Published on

பிரிட்டனை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் தீபாவளி பண்டிக்கைக்கென சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2.8 லட்சம் மதிப்புள்ள சலுகைகள் மற்றும் கூடுதல் வாரண்டி வழங்கப்படுகிறது. 

தீபாவளி சலுகைகள் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ்., டைகர் 800 எக்ஸ்.ஆர்., டைகர் 1200 மற்றும் போன்வில் டி100 போன்ற மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் அக்டோபர் 27 வரை மட்டுமே பொருந்தும். 

தீபாவளி சலுகையின் அங்கமாக டிரையம்ப் டைகர் 1200 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் வாங்குவோருக்கு பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள டிரையம்ப் அட்வென்ச்சர் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் பயிற்சி பெற முடியும். டிரையம்ப் டைகர் 800 எக்ஸ்.ஆர். மாடலை வாங்குவோருக்கு ரூ. 2.8 லட்சம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் வாரண்டி மற்றும் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள ஸ்டோர் வவுச்சர் வழங்கப்படுகின்றன. டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ். மாடல் ஜனவரி 2020 வாக்கில் அப்டேட் செய்யப்பட இருப்பதால், இந்த மாடலுக்கும் அதிகளவு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1.59 லட்சம் மதிப்புள்ள பலன்களும், ரூ. 59,000 மதிப்புள்ள ஏரோ சைலன்சர், ரூ. 70,000 மதிப்புள்ள அப்கிரேடு போனஸ் போன்றவை வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com