இந்தியாவில் பெனலி லியோன்சினோ 500 சீரிஸ் விலை உயர்வு

பெனலி நிறுவனத்தின் லியோன்சினோ பிஎஸ்6 மாடல் இந்தியாவில் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
பெனலி லியோன்சினோ 500
பெனலி லியோன்சினோ 500
Published on

பெனலி இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக லியோன்சினோ 500 மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்தி உள்ளது. விலை உயர்வின் படி பெனலி லியோன்சினோ 500 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 4,69,900 என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் விலை ரூ. 4,59,000 ஆக இருந்தது. 

இந்திய சந்தையில் பெனலி லியோன்சினோ 500 மாடல் ஸ்டீல் கிரே மற்றும் லியோன்சினோ ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் புதிய விலை முறையே ரூ. 4,69,900 மற்றும் ரூ. 4,79,900 என மாறி இருக்கிறது. பிப்ரவரி மாத வாக்கில் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் வட்ட வடிவ ஹெட்லைட், டூயல் டோன் முன்புற பென்டர், வட்ட வடிவ பியூவல் டேன்க், ஒற்றை இருக்கை அமைப்பு, எல்இடி லைட்டிங், ட்வின்-பாட் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் என்ற போதும் இதன் செயல்திறன் குறைக்கப்படவில்லை.

பெனலி லியோன்சினோ 500 பிஎஸ்6 மாடலில் உள்ள 500சிசி, பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் 46.8 பிஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com