2021 சுசுகி ஹயபுசா வெளியீட்டு விவரம்

இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சூப்பர்பைக் மாடலுக்கான டீசரை சுசுகி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
2021 சுசுகி ஹயபுசா
2021 சுசுகி ஹயபுசா
Published on

சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹயபுசா சூப்பர்பைக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடலுக்கான டீசரை தற்போது சுசுகி வெளியிட்டு உள்ளது. டீசரில் புது ஹயபுசா மாடல் இந்திய வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், புதிய சூப்பர்பைக் மாடல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை சுசுகி ஹயபுசா மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2021 ஹயபுசா மாடலில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு முழுமையான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை 2021 ஹயபுசா மாடலில் டூ-டோன் நிறங்கள், எல்இடி ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடில், ட்வின்-சைடு எக்சாஸ்ட் உள்ளது.

இந்த மாடல் யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையிலான 1340சிசி, இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

இத்துடன் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் மெக்கானிசம் கொண்டுள்ளது. இந்த சூப்பர்பைக் லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என சுசுகி தெரிவித்து இருக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com