இந்திய வலைதளத்தில் 2021 சுசுகி ஹயபுசா - விரைவில் வெளியீடு

சசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2021 ஹயபுசா மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
2021 சுசுகி ஹயபுசா
2021 சுசுகி ஹயபுசா
Published on

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிய ஹயபுசா மோட்டார்சைக்கிளை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறது. அந்த வகையில் 2021 ஹயபுசா மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.  

ஸ்டைலிங்கை பொருத்தவரை 2021 ஹயபுசா மாடலில் டூ-டோன் நிறங்கள், எல்இடி ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடில், ட்வின்-சைடு எக்சாஸ்ட் உள்ளது. 

இந்த மாடல் யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையிலான 1340சிசி, இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

இத்துடன் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் மெக்கானிசம் கொண்டுள்ளது. இந்த சூப்பர்பைக் லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என சுசுகி தெரிவித்து இருக்கிறது.

முந்தைய தலைமுறை ஹயபுசா மாடல் இந்திய சந்தையில் ரூ. 13.7 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. எனினும், புது மாடலின் விலை ரூ. 17 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com