சர்வதேச சந்தையில் 2021 சுசுகி ஹயபுசா அறிமுகம்

சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
2021 சுசுகி ஹயபுசா
2021 சுசுகி ஹயபுசா
Published on

சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஹயபுசா மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சுசுகி ஹயபுசா மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புது அம்சங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

புதிய சூப்பர்பைக் எல்இடி லைட்டிங் கொண்டிருக்கிறது. இதன் இன்டிகேட்டர்கள் பொசிஷன் லேம்ப்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் பேரிங் கூர்மையான காண்டொர் கொண்டிருக்கிறது. இது மோட்டார்சைக்கிளுக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் குரோம் பிளேட் செய்யப்பட்ட எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன.

2021 சுசுகி ஹயபுசா மாடலில் புதிய டிஎப்டி டிஸ்ப்ளே, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய ஸ்விட்ச் கியர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் லான்ச் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், கார்னெரிங் ஏபிஎஸ், ஹில்-ஹோல்டு கண்ட்ரோல், 6 ஆக்சிஸ் ஐஎம்யு, 3 லெவல் என்ஜின் பிரேக்கிங் வசதிகளை கொண்டுள்ளது.

இத்துடன் 10-லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஆண்டி-வீலி கண்ட்ரோல், சுசுகி இன்டெலிஜண்ட் ரைடு சிஸ்டம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றுடன் முந்தைய மாடல்களை போன்றே அலுமினியம் பிரேம் கொண்டிருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் 1340சிசி இன்-லைன், 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com