2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 வெளியீட்டு விவரம்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி வருகிறது.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350
ராயல் என்பீல்டு கிளாசிக் 350
Published on

ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய தகவல்களின் படி 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

முந்தைய ஸ்பை படங்களின்படி 2021 கிளாசிக் 350 மாடல் வெளிப்புற தோற்றம் சற்றே மாற்றப்பட்டு, புது தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மீடியோர் 350 மாடலின் தொழில்நுட்பங்கள் புதிய கிளாசிக் 350 மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய கிளாசிக் 350 மாடலில் 349சிசி சிங்கில் சிலிண்டர், DOHC என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் மீடியோர் 350 மாடலில் வழங்கப்பட்ட டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் அம்சமும் 2021 கிளாசிக் 350 மாடலில் வழங்கப்படலாம்.

புதிய மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக அமையும். தற்போதைய கிளாசிக் 350 விலை ரூ. 1,79,782 என துவங்கி அதிகபட்சம் ரூ. 2,06,962 வரை விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com