ரூ. 25 லட்சம் விலையில் புதிய சூப்பர்பைக் அறிமுகம்.. டுகாட்டி அசத்தல்..!

புதிய டுகாட்டி சூப்பர்பைக் மாடலில் பவர் மோட்கள், ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. டுகாட்டி டயவெல் V4 மாடலில் 1158சிசி, V4 கிரான்டூரிஸ்மோ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரூ. 25 லட்சம் விலையில் புதிய சூப்பர்பைக் அறிமுகம்.. டுகாட்டி அசத்தல்..!
Published on

டுகாட்டி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய டயவெல் V4 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய டுகாட்டி டயவெல் V4 மாடலின் விலை ரூ. 25 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலின் சில அம்சங்கள் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், இந்த மாடலில் 1158சிசி, V4 கிரான்டூரிஸ்மோ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 126 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 17 இன்ச் கேஸ்ட்-அலுமினியம் அலாய் வீல்கள் மற்றும் டயப்லோ ரோஸோ III டயர்கள் வழங்கப்படுகின்றன.

சஸ்பென்ஷனுக்கு முன்புறத்தில் 50mm அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றை முழுமையாக அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரட்டை 330mm டிஸ்க், பிரெம்போ ஸ்டைல்மா மோனோபிளாக் கேலிப்பர்கள், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.

இந்த மாடலில் 5-இன்ச் TFT ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இது பவர் மோட்கள், ரைடிங் மோட்கள், 6 ஆக்சிஸ் IMU சார்ந்த பிட்களான கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பவர் லான்ச், குயிக்ஷிஃப்டர் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய டுகாட்டி டயவெல் V4 மாடல் டுகாட்டி ரெட் மற்றும் த்ரில்லிங் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com