ரூ. 7.99 லட்சம் விலையில் கவாசகியின் பி.எஸ்.4 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

கவாசகி நிறுவனத்தின் இசட்900 பி.எஸ்.4 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கவாசகி இசட்900 பி.எஸ்.4 ஸ்பெஷல் எடிஷன்
கவாசகி இசட்900 பி.எஸ்.4 ஸ்பெஷல் எடிஷன்
Published on

கவாசகி நிறுவனம் இந்தியாவில் இசட்900 மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய ஹார்டுவேர் வழங்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார்சைக்கிளில் பி.எஸ்.4 ரக என்ஜினே வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் பி.எஸ்.6 மாடல் விலை ரூ. 8.5 லட்சத்தில் துவங்கி ரூ. 9 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

புதிய மாடலின் ஹெட்லேம்ப் தற்சமயம் எல்.இ.டி. விளக்குகளை கொண்டிருக்கிறது. இத்துடன் 4.3 இன்ச் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷன் இசட்900 மாடலில் 948சிசி, இன்-லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 123 பி.ஹெச்.பி. பவர், 98.6 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் மூன்று மோட் கொண்ட டிராக்‌ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் க்ரிப்பர் டன்லப் ஸ்போர்ட்ஸ் மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com