இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிள்

இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிள் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கவாசகி இசட்900
கவாசகி இசட்900
Published on

கவாசகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிளாக கவாசகி இசட்900 இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் கவாசகி நிறுவனம் தனது நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் உற்பத்தியை நிறுத்தியது. இதன் பின் இசட் 900 மாடல் விற்பனை அதிகரிக்க துவங்கியது.  

கடந்த மாதம் கவாசகி இசட்900 மாடல் சுமார் 39 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த மாதம் 71 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது 82 சதவீத வளர்ச்சியாகும். இதுதவிர கவாசகி இசட்650 மாடல்களில் 20 யூனிட்களையும், நின்ஜா 650 மாடலில் 18 யூனிட்களையும், வல்கன் எஸ் மாடலில் 12 யூனிட்களையும், இசட்.எக்ஸ்.-10 ஆர்.ஆர். மாடலில் 13 யூனிட்களையும் விற்பனை செய்து இருக்கிறது.

நின்ஜா 300, இசட்.எக்ஸ். 6 ஆர், வெர்சிஸ் 300 எக்ஸ், வெர்சிஸ் 1000, நின்ஜா ஹெச்2 உள்ளிட்ட மாடல்கள் வெறும் ஒரு யூனிட் விற்பனையாகி இருக்கிறது. நின்ஜா 1000 மாடல் மொத்தம் 35 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. கவாசகி இசட்900 பி.எஸ்.4 மாடல்களின் விலை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 7.70 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2020 கவாசகி இசட்900 மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட்கள், ட்வீக் செய்யப்பட்ட டெயில் எண்ட் மற்றும் இதர காஸ்மெடிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு ரைடிங் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், என்ஜின் பவர் அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளில்- ரோட், ரெயின், ஸ்போர்ட் மற்றும் ரைடர் என மொத்தம் நான்குவித ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு மோடிலும் வெவ்வேறு செயல்திறன் மற்றும் ஏ.பி.எஸ். செட்டிங்கள் வேறுபடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com