ஊரடங்கு உத்தரவால் கவாசகி வாகனங்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நீட்டிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், கவாசகி நிறுவன வாகனங்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நின்ஜா
கவாசகி நின்ஜா
Published on

கவாசகி நிறுவன வாகனங்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நீட்டிக்கப்படுவதாக கவாசகி இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த வகையில் மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரையிலான காலக்கட்டத்தில் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நிறைவு பெற்ற வாடிக்கையாளர்கள் இந்த சேவை நீட்டிப்பு மூலம் பயன்பெற்று கொள்ளலாம் என கவாசகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. வாரண்டி மற்றும் சர்வீஸ் ஜூன் 30 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பஜாஜ் ஆட்டோ, கேடிஎம், யமஹா, டிவிஎஸ் மற்றும் ஹோண்டா என பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நீட்டிப்பதாக அறிவித்து இருந்தன. இந்த பட்டியலில் கவாசகி நிறுவனமும் இணைந்திருக்கிறது. 

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பணிகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com