போதிய வரவேற்பு இல்லை..? இரு மாடல்களை சத்தமின்றி செய்துவிட்ட யமஹா..!

இவை மிடில் வெயிட் பிரிவில் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடல்களாக நிலைநிறுத்தப்பட்டன. ஜிஎஸ்டி திருத்தங்களுக்குப் பிறகு ரூ. 20,000 குறைக்கப்பட்டது.
போதிய வரவேற்பு இல்லை..? இரு மாடல்களை சத்தமின்றி செய்துவிட்ட யமஹா..!
Published on

யமஹா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் YZF-R3 மற்றும் MT-03 மோட்டார்சைக்கிள்களின் விற்பனையை சத்தமின்றி நிறுத்தியது. யமஹா நிறுவனம் இரண்டு மோட்டார்சைக்கிள்களின் இறக்குமதியை நிறுத்தியுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள பல யமஹா டீலர்ஷிப்கள் தங்களிடம் இரண்டு மாடல்களின் ஸ்டாக் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளன.

யமஹா R3 மற்றும் MT-03 ஆகியவை இந்தியாவில் CBU (முற்றிலும் கட்டமைக்கப்பட்ட) யூனிட்களாக அறிமுகம் செய்யப்பட்டன. இவை மிடில் வெயிட் பிரிவில் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடல்களாக நிலைநிறுத்தப்பட்டன. இருப்பினும், அவற்றின் அதிக விலை காரணமாக, எதிர்பார்த்த விற்பனையை பதிவு செய்யவில்லை.

இரண்டு மோட்டார்சைக்கிள்கள் R3 ரூ. 4.65 லட்சமாகவும், MT-03 ரூ. 4.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், யமஹா அதன் மாடல்களை மிகவும் போட்டித்தன்மையுடன் மாற்றும் முயற்சியாக ரூ. 1.10 லட்சம் குறிப்பிடத்தக்க விலை குறைப்பை அறிவித்தது.

இதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி திருத்தங்களுக்குப் பிறகு ரூ. 20,000 குறைக்கப்பட்டது. இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், மோட்டார்சைக்கிள்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்றே தெரிகிறது. இந்த வரிசையில் தற்போது இரு மாடல்களும் இந்திய சந்தையில் நிறுத்தப்பட்டன.

தற்போது, யமஹா நிறுவனம் R15, MT-15 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட XSR 155 ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ளது. இருப்பினும், யமஹா 2026 ஆம் ஆண்டின் மத்தியில் புதிய R3 மற்றும் MT-03 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய யமஹா R3 புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங் மற்றும் கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com