மே மாதத்தில் இத்தனை யூனிட்களா? விற்பனையில் அசத்தும் டி.வி.எஸ். மோட்டார்

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை 85 சதவீதம் அதிகரிப்பு. சமீபத்தில் டி.வி.எஸ். நிறுவனம் புதிய ஐகியூப் இ ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள்
டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள்
Published on

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் மே மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2 லட்சத்து 87 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. 

கடந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 1 லட்சத்து 54 ஆயிரம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் விற்பனையில் 85 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 

டி.வி.எஸ். நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 1 லட்சத்து 91 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 52 ஆயிரத்து 084 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு விற்பனையில் அமோக வளர்ச்சி ஏற்பட்ட நிலையில் ஏற்றுமதியில் சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 1 லட்சத்து 02 ஆயிரம் யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 95 ஆயிரத்து 576 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன. 

டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 18.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. டி.வி.எஸ். ஸ்கூட்டர்களை பொருத்தவரை கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆயிரத்து 627 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com