சத்தமின்றி என்டார்க் 125 விலையை உயர்த்திய டிவிஎஸ்... புதிய விலை விவரம்..!

டிவிஎஸ் நிறுவனம் ரேடியான் மற்றும் ஸ்டார் சிட்டி பிளஸ் ஆகியவற்றின் விலைகளையும் உயர்த்தியுள்ளது. விலை உயர்வைத் தவிர, என்டார்க் 125 இயந்திர ரீதியாக மாறாமல் உள்ளது.
சத்தமின்றி என்டார்க் 125 விலையை உயர்த்திய டிவிஎஸ்... புதிய விலை விவரம்..!
Published on

இந்தியாவில் என்டார்க் 125 (Ntorq 125) ஸ்கூட்டரின் விலையை டிவிஎஸ் நிறுவனம் சத்தமின்றி அதிகரித்துள்ளது. இப்போது ஸ்கூட்டரின் அனைத்து வேரியண்ட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. டிவிஎஸ் என்டார்க் 125 மாற்றப்பட்ட புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்..

டிவிஎஸ் என்டார்க் 125 டிஸ்க் வேரியண்ட் ரூ.350 உயர்ந்து, ரூ.81,250 என்றும், ரேஸ் எடிஷன் ரூ.350 உயர்ந்து, ரூ.86,550 என்றும், சூப்பர் ஸ்குவாட் எடிஷன் ரூ.350 உயர்ந்து, ரூ.91,050 என்றும், ரேஸ் XP ரூ.350 உயர்ந்து, ரூ.92,550 என்றும், XT வேரியண்டும் ரூ.350 உயர்ந்து, ரூ.1,01,150 என்றும் மாறியுள்ளது.

இந்த விலை உயர்வு காரணமாக என்டார்க் சீரிஸ் அனைத்து வேரியண்ட்களும் ரூ.350 உயர்வை கண்டுள்ளன. இந்த உயர்வு பெரியதல்ல, மேலும் வாங்கும் முடிவுகளை பாதிக்க வாய்ப்பில்லை. இந்த நிறுவனம் அதன் சீரிஸ் முழுவதும் விலைகளை திருத்தி வருகிறது, சமீபத்தில், டிவிஎஸ் XL 100-இன் விலைகளை உயர்த்தியது.

இது தவிர, டிவிஎஸ் நிறுவனம் ரேடியான் மற்றும் ஸ்டார் சிட்டி பிளஸ் ஆகியவற்றின் விலைகளையும் உயர்த்தியுள்ளது. என்டார்க் 125 போலவே, ரேடியான் மற்றும் ஸ்டார் சிட்டி பிளஸின் விலை உயர்வு பெரிய அளவில் இல்லை. விலை உயர்வைத் தவிர, என்டார்க் 125 இயந்திர ரீதியாக மாறாமல் உள்ளது. ஸ்கூட்டரில் இன்னும் 10 பிஹெச்பி மற்றும் 11.5 என்எம் ஆற்றலை உற்பத்தி செய்யும் அதே 124.8 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com