ரூ. 19.90 லட்சம் பட்ஜெட்டில் புது ஹயபுசா மாடல் அறிமுகம்

இந்த பைக், ட்வின்-ஸ்பார் அலுமினிய ஃபிரேம் கொண்டிருக்கிறது.
Suzuki Hayabusa Special Edition
Published on: 

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா, ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹயபுசா மாடலின் விலை ரூ. 19.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்ட் மாடலை விட தோற்றத்தில் சில மேம்பாடுகளை பெற்றுள்ளது. மேலும், ஹயபுசா வரிசையில் மூன்று புதிய வண்ணத் தேர்வுகள் மற்றும் சில எலக்ட்ரானிக் மேம்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

சிறப்பு அம்சங்கள்:

சுசுகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் மாடல்: பியர்ல் விகர் ப்ளூ வண்ணத்தில் வருகிறது. மேலும், இதில் சிறப்பு டீக்கல்கள், வேறுபட்ட வீல் ஃபினிஷ், 3D சுசுகி லோகோ மற்றும் ஃபியூவல் டேங்கில் ஒரு ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மஃப்ளரின் முனை மற்றும் ஹீட் கார்டு ஆகியவையும் அனோடைஸ்டு ஃபினிஷ்களை பெறுகின்றன, அதே சமயம் ஒற்றை இருக்கை கௌல் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

ஸ்டாண்டர்ட் ஹயபுசா இப்போது மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கிறது — கேண்டி டேரிங் ரெட்/கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், மெட்டாலிக் கேலக்ஸி கிரே/கேண்டி பர்ன்ட் கோல்டு மற்றும் பியர்ல் விகர் ப்ளூ/பியர்ல் பிரில்லியன்ட் ஒயிட். இதன் விலை ரூ. 18.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடர்கிறது.

என்ஜின் மற்றும் செயல்திறன்:

சுசுகி, ஹயபுசாவில் எடை குறைந்த மற்றும் மிகவும் கச்சிதமான புதிய ELIIY பவர் லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தியுள்ளது. மேலும், சுசுகி லான்ச் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் பவர் மோட் செலக்டரின் அமைப்புகளையும் திருத்தியமைத்துள்ளது. ஸ்மார்ட் க்ரூயிஸ் கண்ட்ரோல் சிஸ்டமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது இப்போது கியர் மாற்றங்களின் போதும் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டது.

சுஸசுகி ஹயபுசா, 190bhp பவர் மற்றும் 142Nm டார்க் வெளிப்படுத்தும் 1,340cc, இன்லைன்-நான்கு-சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மோட்டார் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக், ட்வின்-ஸ்பார் அலுமினிய ஃபிரேம் கொண்டிருக்கிறது.

மேலும் இதில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய KYB USD முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் ஒரு பின்பக்க மோனோஷாக் ஆகியவை உள்ளன. பிரேக்கிங் அமைப்பில், பிரெம்போ ஸ்டைல்மா முன்பக்க காலிப்பர்களுடன் கூடிய இரட்டை 320mm ஃபுல்-ஃப்ளோட்டிங் டிஸ்க்குகள் இடம்பெற்றுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com