ராயல் என்பீல்டு ஹண்டர் 350 வெளியீட்டு விவரம்

ராயல் என்பீல்டு நிறுவனம் விரைவில் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் குறைந்த விலையில் அறிமுகமாகும் என தெரிகிறது.
ராயல் என்பீல்டு ஹண்டர் 350 வெளியீட்டு விவரம்
Published on

ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய ஹண்டர் 350 வெளியீடு ஆகஸ்ட் 4 முதல் 8 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

புதிய ஹண்டர் 350 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் விரைவில் அப்டேட் செய்யப்பட இருக்கும் புல்லட் 350 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட உள்ளது. அந்த வகையில் இதன் விலை ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்தில் இருந்து நிர்ணயம் செய்யப்படு என எதிர்பார்க்கலாம்.

இந்த மாடல் J1C1 எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது ஸ்போக் வீல்கள், குறைந்த அம்சங்களையே கொண்டிருக்கும் என தெரிகிறது. இதே மாடலின் டாப் எண்ட் வெர்ஷன் ஒன்று J1C2 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த மாடலில் அலாய் வீல்கள் மற்றும் சற்றே கூடுதல் அம்சங்கள் வழங்கப்படலாம்.

புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளிலும் 349சிசி என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இதே என்ஜின் தான் கிளாசிக் 350 மற்றும் மீடியோர் 350 போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com