பழைய ரெட்ரோ லுக்கில் 'புல்லட் 350 பைக்': ராயல் என்பீல்ட் அறிமுகம் செய்தது

இந்த புல்லட் பைக்கின் விலை ரூ 1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
The Royal Enfield Bullet 350
Published on

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 பைக்கின் பெட்டாலியன் பிளாக் எடிசன் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

பழைய புல்லட் பைக்கின் ரெட்ரோ லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புல்லட் பைக்கின் விலை ரூ 1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 எச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் முன்பக்க பிரேக்கிற்கு 300 மிமீ டிஸ்க்கும் பின்பக்க பிரேக்கிற்கு 153மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com