இருவித நிறங்களில் கிடைக்கும் ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிஷன் பைக்

இந்த வண்ணத்திலும் எக்ஸாஸ்ட், ஹெட்லைட் மற்றும் பின்புற ஷாக் அப்சார்பர்களில் குரோம் பாகங்கள் இடம்பெற்றுள்ளன.
Honda CB350C Special Edition
Published on: 

2026 ஹோண்டா CB350C சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 2,04,700 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

ரெட் மெட்டாலிக் நிறம், மோட்டார்சைக்கிளுக்கு ஒட்டுமொத்தமாக அடர் சிவப்பு நிற தோற்றத்தை அளிக்கிறது, மேலும் டேங்க் மற்றும் பக்கவாட்டு பேனல்களில் பழுப்பு நிற மெல்லிய கோடுகள் உள்ளன. சிவப்பு மற்றும் பழுப்பு நிறங்களுக்கு இடையிலான வேறுபாடு மிகவும் பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.

குரோம் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன:

ஹெட்லைட், எக்ஸாஸ்ட் மற்றும் பின்புற ஷாக் அப்சார்பர்கள் போன்றவற்றில் சில குரோம் பாகங்களும் சேர்க்கப்பட்டுள்ளன, அவை ஒட்டுமொத்த ரெட்ரோ தீமுடன் நன்கு பொருந்துகின்றன.

முழுமையான பழுப்பு நிற ஃபினிஷூடன் கூடிய இந்த வண்ணம், மோட்டார்சைக்கிளுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கிறது. அடர் பழுப்பு நிற மெல்லிய கோடுகள் மற்றும் இருக்கைகள் இதற்கு மேலும் மெருகூட்டுகின்றன. ரெட் மெட்டாலிக் வண்ணத்தை போலவே, இந்த வண்ணத்திலும் எக்ஸாஸ்ட், ஹெட்லைட் மற்றும் பின்புற ஷாக் அப்சார்பர்களில் குரோம் பாகங்கள் இடம்பெற்றுள்ளன.

என்ஜின் மற்றும் செயல்திறன்:

புதிய வண்ணங்கள் சேர்க்கப்பட்டிருப்பதைத் தவிர, பைக்கின் இயந்திர அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கில் தொடர்ந்து அதே 348.36சிசி, ஏர் கூல்டு, ஒற்றை சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.8bhp பவர் மற்றும் 29.5Nm டார்க் உற்பத்தி செய்கிறது. மேலும், இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட்-அண்ட்-ஸ்லிப்பர் கிளட்ச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com