

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்சர் 180 மாடல் பைக்கின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. டீலர் வட்டாரங்களின்படி, அவர்களுக்கு அந்த பைக்கின் கையிருப்பு வருவது நின்றுவிட்டதுடன், சில மாதங்களுக்கு முன்பே அதன் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
தேவை குறைவு மற்றும் புதிய தலைமுறை பல்சர் மாடல்களுக்கு வழிவிட வேண்டிய அவசியம் ஆகியவை இந்த உற்பத்தி நிறுத்தத்திற்கு காரணமாக இருக்கலாம்.
பல்சர் 220F-இன் 180சிசி மாடல் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்ட உடனேயே, தற்போதைய பல்சர் 180 பிப்ரவரி 2021-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சிறிய தோற்ற மாற்றங்கள் மற்றும் வெவ்வேறு வண்ண தேர்வுகளுடன், பல்சர் 150 மாடலை போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது . பல்சர் 180-இன் கடைசியாக அறியப்பட்ட எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1.17 லட்சம் ஆகும்.
பல்சர் 180 பைக்கில் 178.6சிசி, ஏர்-கூல்டு, DTSI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 16.76bhp பவர் மற்றும், 14.52Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த பைக்கில் 15-லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் எடை 151 கிலோ ஆகும்.
இதன் இரு முனைகளிலும் 17-இன்ச் அலாய் வீல்கள், டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் 5-ஸ்டெப் ப்ரீலோட் அட்ஜஸ்ட்மென்ட் வசதியுடன் கூடிய டூயல் ஸ்பிரிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரு முனைகளிலும் சிங்கிள் டிஸ்க் பிரேக் மற்றும் ஸ்டாண்டர்டாக சிங்கிள்-சேனல் ABS ஆகியவை பிரேக்கிங் அமைப்பை கையாளுகின்றன.