பல்சர் சீரிஸ் மாடல்களுக்கு ரூ. 12,000 வரையிலான சலுகைகள் வழங்கும் பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீப காலமாக தொடர்ச்சியாக புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.
Pulsar Offer
Published on: 

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பண்டிகை காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், தனது பல்சர் மாடல்களில் குறிப்பிட்ட கால சலுகைகளை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ரூ. 12,000 வரை சேமிக்க உதவும் என கூறப்படும் இந்த சலுகைகளில், ரொக்க சலுகை, இலவச பிராசசிங் கட்டணம் மற்றும் ஐந்து இலவச சர்வீஸ்கள் ஆகியவை அடங்கும்.

சலுகைகள் மாடல் மற்றும் பிராந்தியத்தை பொறுத்து மாறுபடும் என்பதையும், அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் டீலர்ஷிப்களில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இவை கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பல்சர் சீரிஸ் சலுகைகள்:

பல்சர் சீரிசில் உள்ள ஏறக்குறைய அனைத்து மாடல்களுக்கும் இந்த சலுகைகள் பொருந்தும் என்று பஜாஜ் குறிப்பிட்டுள்ளது. இதில் பல்சர் 125, NS125, பல்சர் 150 , பல்சர் N160 S/SS, NS160, NS200, N250, 220F, RS200 மற்றும் முதன்மை மாடலான பல்சர் NS400Z ஆகியவை அடங்கும்.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பஜாஜ் டீலர்ஷிப்பை தொடர்புகொண்டு, தாங்கள் குறிப்பாக விரும்பும் மாடலில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்த விவரங்களை கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.

புதிய அப்டேட்:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீப காலமாக தொடர்ச்சியாக புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அண்மை காலங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய நிகழ்வாக அமைந்தது, அடுத்த தலைமுறை பல்சர் 150 மற்றும் பல்சர் 125 மாடல்களின் அறிமுகம் ஆகும்.

மேலும், இந்நிறுவனம் ஒரு டீலர்ஷிப்பில் காணப்பட்ட NS125 மற்றும் அதன் முதன்மை மாடலான NS400Z ஆகியவற்றுக்கும் புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. உண்மையில், பல்சர் N160 SS மாடலில் முதன்முதலில் அறிமுகமான தனது புதிய TFT டிஸ்ப்ளேவை இணைத்து, பஜாஜ் நிறுவனம் விரைவில் தனது முழு பல்சர் ரக மாடல்களையும் மேம்படுத்த உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com