அசத்தல் அப்டேட்களுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R இந்தியாவில் அறிமுகம்

புதிய ஹீரோ மோட்டார்சைக்கிள் மூன்றுவித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
2026 Hero Xtreme 250R
Published on: 

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 250R மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அப்டேட் செய்தது. புதுப்பிக்கப்பட்ட புதிய எக்ஸ்ட்ரீம் 250R மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது.

தற்போது கார்பன் ரெட், கார்பன் ஒயிட் மற்றும் கார்பன் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் வழங்கப்படும் இந்த பைக்கின் புதிய கார்பன்-ஃபைபர் ஹைட்ரோ-டிப்டு பேனல்கள், இதற்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை அளிக்கின்றன.

இந்த அப்டேட்டின் ஒரு பகுதியாக, 50-க்கும் மேற்பட்ட ஃபிட் மற்றும் ஃபினிஷ் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மேம்பட்ட பாகங்களின் ஃபினிஷ்கள், பிரெய்டட் கேபிள்கள் மற்றும் ஒரு புதிய ஸ்விங்ஆர்ம் டெயில் கவர் ஆகியவை அடங்கும்.

என்ஜின் மற்றும் செயல்திறன்:

ஹீரோ நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிள் முழுவதும் ஹைட்ரோ-டிப் செய்யப்பட்ட கார்பன்-ஃபைபர் வகை பேனல்களைப் பயன்படுத்தியுள்ளது. இவற்றுடன், கோல்டு-அனோடைஸ் செய்யப்பட்ட முன்பக்க ஃபோர்க்குகள், ரிம் டேப்களுடன் கூடிய வண்ணமயமான வீல்கள், மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் இடம்பெற்றுள்ளன.

மெக்கானிக்கல் ரீதியாக, அடிப்படை என்ஜினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R மாடலிலும் 29bhp பவர், 25.3Nm டார்க் உற்பத்தி செய்யும் அதன் 250cc லிக்விட்-கூல்டு ஃ4-வால்வ் DOHC சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 250cc பிரிவிலேயே இதுதான் அதிகபட்ச டார்க் என்று ஹீரோ நிறுவனம் கூறுகிறது, மேலும் 0-60 கி.மீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டும் என்றும் குறிப்பிடுகிறது.

கூடுதல் அம்சங்கள்:

இந்த பைக்கில் தற்போது குரூயிஸ் கண்ட்ரோல் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது, ஓட்டுநர் த்ராட்டிலை தொடர்ந்து பிடிக்காமலேயே ஒரு குறிப்பிட்ட வேகத்தைப் பராமரிக்க அனுமதிக்கிறது.

மேலும், இந்த மாடல், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் சென்சார் இல்லாத இருவழி குயிக்ஷிஃப்டரையும் அறிமுகப்படுத்துகிறது. இது கிளட்ச் இல்லாமல் கியர்களை மேலே மற்றும் கீழே மாற்ற அனுமதிக்கிறது. அத்துடன், கியர் மாற்றங்களின் போது ஓட்டுநர் த்ராட்டிலை மூடாமலேயே செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பைக்கில் ரெயின், ரோடு, ஸ்போர்ட் மற்றும் டிராக் என நான்கு ரைடிங் மோட்கள் உள்ளன. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டமும் (Tyre Pressure Monitoring System) சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம், டயர் பிரஷர் மற்றும் வெப்பநிலை இரண்டையும் நிகழ் நேரத்தில் காண்பிப்பதுடன், பிரஷர் பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்கு வெளியே சென்றால் வண்ண குறியீட்டு எச்சரிக்கைகளையும் வழங்குகிறது.

விற்பனை விவரம்:

இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் ஒரு புதிய முழு வண்ண TFT யூனிட்டாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு, அழைப்பு மற்றும் செய்தி எச்சரிக்கைகள், தொலைபேசி பேட்டரி தகவல் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகியவற்றை வழங்குகிறது.

புதிய சாஃப்ட்-டச் ஸ்விட்ச் கியர், TFT-க்குத் துணையாக இருப்பதுடன், ஒரு பிரத்யேக மோட் செலக்டர், ஒருங்கிணைந்த கில்-ஸ்டார்ட் ஸ்விட்ச், ஹசார்ட் பட்டன் மற்றும் குரூயிஸ்-கண்ட்ரோல் ஸ்விட்ச்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர், ஹீரோ பிரீமியா டீலர்ஷிப்கள் மூலம் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும். இது கார்பன் ரெட், கார்பன் ஒயிட் மற்றும் கார்பன் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவுகள் இன்று (அக். 17) தொடங்குகின்றன, மேலும் விநியோகம் நவம்பர் 01-ஆம் தேதி முதல் ஆரம்பமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com