மேம்பட்ட அம்சங்களுடன் 2026 பஜாஜ் பல்சர் RS200 இந்தியாவில் அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட RS200 மாடலில் 199.5cc லிக்விட்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜினே வழங்கப்பட்டுள்ளது.
2026 Bajaj Pulsar RS200
Published on: 

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கணிசமான மேம்பாடுகளுடன் கூடிய பல்சர் RS200 பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மேம்பட்ட பல்சர் பைக் விலை ரூ. 1,98,441 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேம்பட்ட புதிய மாடலில் என்ஜின் திறன் அதிகரிக்கப்பட்டு, எலெக்டிரானிக் திராட்டில் பாடி (ETB), பலவிதமான ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷிஃப்டர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

மேலும், பஜாஜ் நிறுவனம் அப்சைடு டவுன் முன்பக்க ஃபோர்க்குகள், ரேடியல் பின்பக்க டயர் மற்றும் கூகுள் மேப்ஸ் மிரரிங் வசதியுடன் கூடிய 5-இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

என்ஜின் மற்றும் செயல்திறன்:

மேம்படுத்தப்பட்ட RS200 மாடலில் 199.5cc லிக்விட்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜினையே தொடர்ந்து பயன்படுத்துகிறது. இதன் அதிகபட்ச திறன் 25.1bhp பவர் மற்றும் 18.7Nm டார்க் வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.

ETB-யின் அறிமுகம், மோட்டார்சைக்கிளின் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் சிஸ்டம் மூலம் த்ராட்டில் ரெஸ்பான்ஸை நிர்வகிக்க உதவுகிறது. இந்த சிஸ்டம் பல்வேறு ரைடிங் மோட்களை வழங்குகிறது, இதன் மூலம் ஓட்டுநர்கள் சாலை நிலைமைகள் மற்றும் தங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப வெவ்வேறு என்ஜின் ரெஸ்பான்ஸ்களை தேர்ந்தெடுக்க முடியும்.

வேகப்படுத்தும் போது பின் சக்கரம் சறுக்குவதை கட்டுப்படுத்த உதவும் வகையில், பஜாஜ் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பைக்கில் ஸ்போர்ட்ஸ் ஷிஃப்டரும் கிடைக்கிறது.

அம்சங்கள்:

வழக்கமான டெலஸ்கோபிக் முன்பக்க சஸ்பென்ஷனுக்குப் பதிலாக 37மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது பிரேக் பிடிக்கும்போதும் மற்றும் வளைவுகளில் திரும்பும்போதும் முன்பக்க உறுதித்தன்மையையும், ஸ்டீயரிங் துல்லியத்தையும் மேம்படுத்தும். பின்பக்க டயரும் 140/70-R17 ரேடியல் டயராக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் 5-இன்ச் கலர் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய திரை, மோட்டார்சைக்கிளின் திரையின் வழியாக நேரடியாக வழிசெலுத்தல் தகவல்களை அணுகுவதற்கு கூகுள் மேப்ஸ் மிரரிங் வசதியை ஆதரிக்கிறது. கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள மற்ற உபகரணங்களில், சரிசெய்யக்கூடிய கைப்பிடிகள், USB டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது.

X