ஹண்டர் வண்டார் சூடுடா!... 2025 ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்

ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளில் 349சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 2025 ஹண்டர் 350க்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஹண்டர் வண்டார் சூடுடா!... 2025 ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்
Published on

ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய அப்டேட்களுடன் HUNTER 350 2025 மாடல் பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ. 1,49,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Rio White, Tokyo Black. London Red என 3 புதிய நிறங்களில் இந்த பைக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளில் 349சிசி, ஏர்/ஆயில்-கூல்டு, ஜே-சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் தான் கிளாசிக் 350 மற்றும் மீடியோர் 350 போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

2025 ஹண்டர் 350க்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் டெலிவரி தொடங்கும் என ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com