ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது டுகாட்டி நிறுவனம்

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக் 803 சிசி ஏர்/ஆயில் கூல்டு எல்-ட்வின் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பைக்கின் எஞ்சின் 8,250 rpm இல் 73 hp ஆற்றலை வெளிப்படுத்தும்.
ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது டுகாட்டி நிறுவனம்
Published on

டுகாட்டி இந்தியா நிறுவனம் ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது

இந்த பைக்கின் விலை ரூ. 9.97 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி அறிமுகப்படுத்திய பைக்குகளில் இது மிகவும் விலை குறைவான பைக் என்று சொல்லப்படுகிறது.

ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக்கின் விலை இதற்கு முன்பு வெளியான ஸ்க்ராம்ப்ளர் ஐகான் மாடலை விட ரூ.94,000 குறைவாகும்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக் 803 சிசி ஏர்/ஆயில் கூல்டு எல்-ட்வின் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த எஞ்சின் 8,250 rpm இல் 73 hp ஆற்றலையும், 7,000 rpm இல் சுழலும் போது 65 Nm டார்க் விசையையும் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டுகாட்டி நிறுவனம் தனது டெசெர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த பைக் ரூ.21.78 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com