கன்னி- 2026 வார ராசிபலன் 16.8.2026 முதல் 22.8.2026 வரை

குழந்தை பாக்கியம் ஏற்படும்.
Kanni
கன்னி
Published on: 

கன்னி

அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டிய வாரம். ராசியில் 2,9ம் அதிபதி சுக்கிரன் நீச்ச நிலையில் சஞ்சரிக்கிறார். தொழிலை மேம்படுத்த அல்லது தொழில் மாற்றம் செய்ய வங்கிக் கடன் கிடைக்கும். ராசிக்கு 7-ல் சனி பகவான் வக்ரம் அடைவதால் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். அரசுத்துறை வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களிலும், சட்டத்திற்கு புறம்பான விசயங்களிலும் ஆர்வம் குறைப்பது நல்லது. நீண்ட நெடு நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த வேண்டுதல்கள், பிரார்த்தனைகளை நிறைவேற்றி முடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் ஏற்படும். ஆடி வெள்ளிக் கிழமை விரதம் இருந்து கன்னி தெய்வங்களை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com