

தடைபட்ட பணிகள் துரிதமாகும் வாரம். அஷ்டமாதிபதி செவ்வாய்க்கு குரு, சனி சம்பந்தம் இருப்பதால் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். சட்டச் சிக்கல்கள் முழுமையாக விலகும். சொத்து, தொழில் போன்றவற்றிக்கு வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்துக்களால் அனுகூலமும் தாய் மாமன் வழி ஆதாயமும் உண்டு. அரசு வழியில் எதிர்பார்த்த உத்தரவு கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பாதகம் விலகி சாதகம் நடக்கும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். சொந்த வீட்டு ஆசை நிறைவேறும். பண்டிகைகள் விழாக்களில் கலந்து கொண்டு ஆனந்தமடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குல இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகமாகும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து கிரிவலம் செல்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.