கன்னி- 2026 வார ராசிபலன் 8.11.2026 முதல் 14.11.2026 வரை

நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.
Kanni
Published on: 

கன்னி

பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் சுக்கிரனுடன் பரிவர்த்தனை யோகத்தில் சஞ்சரிக்கிறார். பாக்கிய பலத்தால் நடப்பதை எதிர்கொள்ள முடியும். தன வரவில் சாதகமான நிலை உண்டு. நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்லவும். கோபத்தை குறைத்து ஆரோக்கியத்தை கடைபிடிக்க வேண்டும். அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். தம்பதிகளின் உறவில் அன்யோன்யம் நீடிக்கும். அறிமுகமில்லாத எதிர்பாலின நட்பைக் தவிர்க்கவும். மறு திருமண முயற்சி கைகூடும். முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் மறைவு ஸ்தானங்களை வலிமைப்படுத்துகிறது. வீண் விரயங்கள், இழப்புகள், மருத்துவமனை செலவுகள் வரலாம். சஷ்டி விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X