கன்னி- 2026 வார ராசிபலன் 4.10.2026 முதல் 10.10.2026 வரை

சிலர் வாரிசுகளை தங்களின் தொழில், வியாபாரத்தில் ஈடுபடுத்தி ஆனந்தம் அடைவார்கள்.
Kanni
Published on: 

கன்னி

விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். கன்னி ராசிக்கு விரய ஸ்தான அதிபதியான சூரியன் ராசியில் சஞ்சரிக்கிறார். முயற்சியில் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். விண்ணப்பித்த வெளிநாடு, அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளது. சிலர் வாரிசுகளை தங்களின் தொழில், வியாபாரத்தில் ஈடுபடுத்தி ஆனந்தம் அடைவார்கள். குழந்தை பாக்கியம் உன்டாகும். வாழ்க்கைத் துணையும், தொழில் பங்குதாரரும் நிறையச் செலவை இழுத்து விடுவார்கள். சிலர் பிள்ளைகள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்து வார்கள். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கணிசமான தொகையாகச் சேர்ந்து கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். பிள்ளைகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகமாகும். சிலருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் உண்டாகும். ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும். கண்டகச் சனியை மீறிய நல்ல பலன்கள் நடக்கும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். விருப்ப விவாகத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். பெண்களுக்கு ஆன்லைன் மோகம் அதிகரிக்கும். மஹாளய அமாவாசை அன்று கீரை சாதம் தான வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com