

சுமாரான வாரம். ராசி அதிபதி புதன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். அங்கே விரயாதிபதி சூரியனும் வக்கிர சுக்கிரனுடன் சஞ்சரிப்பதால் தாயார், மூத்த சகோதரத்துடன் சாதுர்யமாக நடந்து கொள்ளவும். சிலர் வேலைக்காக வெளிநாடு செல்லலாம். வீடு கட்டும் பணி துரிதமடையும். திடீர் செலவுகள் ஏற்படலாம். அலைச்சல் மிகுந்த பயணத்தால் டென்ஷன் அதிகரிக்கும். சஞ்சரிப்பதால் குடும்பத்தின் மேல் கண் திருஷ்டி அதிகமாகும். திடீர் செலவுகள் ஏற்படலாம். உங்களால் உயர்ந்த சகோதர, சகோதரிகள் உங்களைப் பற்றி புறம் பேசுவது உங்களின் கவனத்திற்கு வரும். இதனால் உங்கள் குடும்பத்தில் அமைதி குறைவது போன்ற இனம் புரியாத மன உணர்வு தோன்றும். தந்தைக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு அரசு வகை ஆதாயம் கிடைக்கும். அறுவை சிகிச்சை சுமூகமாகும். திருமணத்தடை அகலும். மறுமண முயற்சி வெற்றி தரும். 25.10.2026 அன்று இரவு 7.22 முதல் 27.10.2026 அன்று இரவு 9.06 வரை சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உங்கள் வார்த்தைகள் குடும்பத்தினரை காயப்படுத்தலாம். உரிமையை விட உறவுகளே முக்கியம் என்பதை உணர்ந்து பேசவும். பௌர்ணமி அன்று மகாவிஷ்ணு வழிபடவும்.