கன்னி- 2026 வார ராசிபலன் 23.8.2026 முதல் 29.8.2026 வரை

அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
Kanni
கன்னி
Published on

கன்னி

தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசியில் சஞ்சரிக்கும் நீச சுக்கிரனுக்கு சனி மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. தைரியம், சுறுசுறுப்பு அதிகரிக்கும். தவறாக புரிந்த உறவினர்கள் பகைமை மறப்பார்கள். குடும்ப உறவுகளுடன் முக்கிய பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தை நடத்துவீர்கள். பாகப்பிரிவினைக்கு உடன் பிறப்புகள் சம்மதிப்பார்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும். அரசு உத்தியோக முயற்சியில் சாதகமான பலன் உண்டு. வழக்குகள் சாதகமாக முடியும். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை கல்வியில் எந்த ஆர்வமும் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் கூடும். அரியர்ஸ் பாடத்தை எழுத முயற்சிக்கலாம். உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி மகிழ்வீர்கள். திருமணத் தடை அகலும். திருமணமான இளம்பெண்கள் கருத்தரிப்பார்கள். ஆரோக்கிய தொல்லை குறையும். வெள்ளிக்கிழமை நவகிரக சுக்கிரனை வெள்ளை மொச்சை படைத்து வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com