

விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் விரயாதிபதி சூரியனுடன் இணைந்து தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. உங்களின் பணிவான, நடத்தைகள், செயல்பாடுகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வெளிநாட்டு தொடர்பு அல்லது வேற்று மதத்தினர் ஆதரவால் புதிய தொழில் வாய்ப்பு கிட்டும். மூத்த சகோதர சகோதரிகள் முன்னுக்கு பின் முரணாக பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். வழக்குகளில் விசாரணை தள்ளிப்போகும். சிலர் பூர்வீக சொத்தை விற்கும் முயற்சியில் ஈடுபடலாம். பண வரவு அதிகரிக்கும். அதற்கு இணையான செலவும் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். வீடு, மனை, வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மருத்துவச் செலவிற்கு பிள்ளைகள் உதவுவார்கள். சுப செலவிற்காக கடன் பெறலாம். திருமணத்தடை அகலும். போட்டிகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும். பேச்சை குறைத்து அமைதி காப்பது நல்லது. பண உதவி செய்வது, பண உதவி பெறுவது ஆகியவற்றை தவிர்க்கவும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.