

தனவரவில் தன்னிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் தன ஸ்தான அதிபதி சுக்கிரனுடன் இணைவதால் தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு. வியாபாரம் சார்ந்த விசயத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. சொத்துச் சேர்க்கை, சொத்துக்களால் வருமானம் உண்டாகும். காணாமல் போன, கைமறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு ஆலயத் திருப்பணிக்கான வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். அறிமுகமில்லாத எதிர்பாலின நட்பைக் தவிர்க்கவும். மறு திருமண முயற்சி கைகூடும். தம்பதிகளின் உறவில் அன்யோன்யம் நீடிக்கும். குடும்பத்திற்குத் தேவையான உயர்ரக பொருட்களை வாங்குவீர்கள். அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. ஆரோக்கிய தொல்லைகள் சீராகும். 22.11.2026 அன்று காலை 5.55 முதல் 24.11.2026 அன்று காலை 7.24 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நினைப்பதற்கு மாறான பலன்கள் நடக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பௌர்ணமி அன்று நெய் தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.