கன்னி- குரு அதிசார வக்ர பெயர்ச்சி பலன்கள்

ஜனன கால ஜாதகத்தில் தசா புக்தி சாதகமாக இருந்தால் நற்பலன்கள் நடக்கும்.
Kanni
Published on: 

இதுவரை ராசிக்கு 11ம் மிடத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக விரய ஸ்தானமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் கன்னி ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம்.

அதிசார, வக்ரகுருவின் பொது பலன்கள்

கன்னி ராசிக்கு குரு பகவான் 4, 7ம் அதிபதி. இரு கேந்திரங்களுக்கு அதிபதியான குரு பன்னிரன்டாமி டத்தில் மறைவது சிறப்பான பலன் அல்ல.பன்னிரன்டாமிடம் என்பது விரயம் மட்டுமல்ல.கடல் தாண்டி பயணம் செய்வதையும், நிம்மதியான தூக்கத்தையும் பற்றிக் கூறுமிடம்.ஏற்றமும்,இறக்கமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. அதனால் இன்பமும், துன்பமும் நிரந்தரமல்ல. உறவுகளும் பணமும் எப்பொழுது வரும் எப்படி போகும் என்று நிதானிக்க முடியாத காரணிகள். தொடர் வெற்றியை சந்திக்கும் ஒருவனுக்கு வாழ்வின் நெளிவு, சுளிவு தெரியாது. தோல்வியை சந்தித்த ஒருவனுக்கே தொழில் ஞானம் நிறைந்து இருக்கும். அந்த வகையில் குரு உங்களுக்கு தொழிலை எப்படி நடத்துவது,வியாபாரம் சிறப்பாக இருக்கும் போது கிடைக்கும் உபரியை எப்படி சேமிப்பது, சிறிய சுணக்கம் ஏற்படும் போது எப்படி தன்னை சுதாரித்துக் கொண்டு நிலைத்து நிற்பது என்ற தொழில் ஞானத்தை வழங்கவுள்ளார். குருவின் போதனைகளை தெளிவாக உள்வாங்கும் போது எத்தனை குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு/கேது பெயர்ச்சி நடந்தாலும் உங்களை அசைக்க முடியாது.இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் சில பாதகங்கள் நடந்தாலும் குருவின் பார்வை பதியும் 4,6,8ம் இடங்கள் மூலமாகவும் சில சுப பலன்கள் நடக்கும். மன நிம்மதி கிடைக்கும் என்பதால் பயம் தேவையில்லை. ஜனன கால ஜாதகத்தில் தசா புக்தி சாதகமாக இருந்தால் நற்பலன்கள் நடக்கும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடும்.

சொத்துக்கள்

சிலர் வெளிநாட்டிற்குச் சென்று பிழைப்பு நடத்த நேரும்.எதிலும் நிதானத்தோடு நேர்மறை எண்ணத்துடன் சிந்தித்து செயல்பட்டால் போதும்.தசா புக்தி சாதகமற்றவர்களுக்கு இது சோதனையான காலம்.மலைபோல் நம்பிக் கொண்டிருந்த சில முக்கியமான விஷயங்கள், முக்கிய நபர்கள் காலை வாரிவிடுவார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பூர்வீகச் சொத்துக்கள் கண் முன்னே பறிபோகலாம். அல்லது வழக்கின் தீர்ப்புகள் சாதமாகாது.எந்த விதத்தில் விரையம் வரும் என்று யோசிக்கும் முன்பு மற்றொரு விரயம் கதவைத் தட்டும். பணம் போனால் மீண்டும் சம்பாதித்து விடலாம்.ஒரு மனிதனுக்கு ஆரோக்கியம் மிக முக்கியம். கட னுக்கு பயந்து ஆரோக் கிய கேட்டை வர வழைத்துக் கொள்ளக் கூடாது. சிலர் கால் மூட்டு அல்லது கண் அறுவை சிகிச்சை செய்யலாம். சிலர் மன மாற்றத்திற்காக புத்துணர்வு மையங் களுக்குச் சென்று திரும்புவார்கள்.சிலர் சோகம் தாளாமல் குடும்ப உறுப்பினர்களை நோகடிப்பார்கள். இது கண்டக சனியின் காலம் என்பதை மறக்கக்கூடாது.

பொருளாதாரம்

இந்த கால கட்டத் தில் வாழ்க்கைத் துணையின் ஆதாயம் உண்டு என்பதால் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு நல்ல பலன்கள் நடை பெற்றாலே கிடைக்கும் பணத்தை வைத்து அனுசரித்து வாழ்ந்து விடலாம்.ஒரு சிலர் பழைய அசையும், அசையாச் சொத்துக்களை விற்று பற்றாக்குறைக்கு கடன்பட்டு புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். அது வாஸ்து குறைபாடு அல்லது விருத்தியில்லாத சொத்தாக அமைந்து விடலாம்.வெகு சிலர் கடன் தொல்லை தாளாமல் நல்ல சொத்தை அடமானத்தில் வைக்கலாம் அல்லது அடிமாட்டு விலைக்கு விற்காலம்.சிலர் போரிங் போடுகிறேன்,கிணறு வெட்டுகிறேன் என தண்ணீருக்கு பதில் கண்ணீரை வரவழைத்துக் கொள்வார்கள்.பிள்ளைகளின் உயர்கல்விக்கு அல்லது திருமணம் போன்ற சுப நிகழ்விற்கு அதிகம் கடன் வாங்கி செலவு செய்ய நேரும். வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாப்பது மிக அவசியம்.

பெண்கள்

பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க நேரும்.குழந்தைகளின் நலனுக்காக கடன் வாங்க நேரலாம்.முறையான அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளில் கடன் வாங்கு வது சிறப்பு. உடனடியாக பணம் கிடைக்கிறது என்பதற்காக நீட்டிய இடங்களில் கையெழுத்திட்டு முறையற்ற நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவது வீண் அவமானத்தை தேடித் தரும். "பதறாத காரியம் சிதறாது " முறையான திட்டமிடல் சங்கடங்களை தீர்க்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும்.ஆவணங்களை படித்து பார்த்து கையெழுத்திட வேண்டும். வெற்றுப் பத்திரம்,வெற்று காசோலைகளில் கையெழுத்து இடுவதை தவிர்த்தல் நலம். கடன் வாங்கும் போதும், திரும்பச் செலுத்தும் போது உரிய ரசீதைப் பெற வேண்டும்.நேரம் கெடும் போது வாங்கும் கடனும், திரும்பச் செலுத்திய கடனும் கூட கழுத்தை அறுக்கும்.போட்டி பொறமை காரணமாக எதிரிகள் உருவாகுவார்கள் என்பதால் யார் வம்புக்கு இழுத்தாலும் கண்டும் காணாதது போல் இருப்பது நல்லது. நல்ல காலம் வரும் போது எதிரிகளை உதிரியாக்கலாம்.

மாணவர்கள்

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.நேரம் கெடும் போது பொறுமை காப்பது அவசியம். காலம் மாறும் போது நிலைமை நிச்சயம் மாறும். நான்காமிடத்திற்கு குருப்பார்வை இருப்பதால் தெளிந்த சிந்தனை உங்களை சிறந்த முறையில் வழி நடத்தும். தினமும் சகலகலா வல்லி மாலை படித்து வர சுபம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள்

உழைப்பிற்கேற்ற பலனை எதிர்பார்க்காமல் காலம் தள்ள வேண்டிய நேரம்.உழைப்பது நீங்கள் நல்ல பெயர் வாங்குவது உங்களை விரட்ட நினைக்கும் சக ஊழியர் என்பதால் உங்கள் குல அல்லது இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.மறைவு ஸ்தானங்களான 6,8,12ம் இடங்கள் பரிபூரணமாக இயங்கும் போது சுய ஜாதகத்தில் சாதகமான தசாபுக்தி நடந்தால் விபரீத ராஜ யோக அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் பெரிய தொகையை விரயம் செய்ய நேரும். வருமானத்தை எதிர்பார்க்க முடியாதுஅகலக் கால் வைக்கக் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. கொடுக்கவும் கூடாது.

முதலீட்டாளர்கள்

அழகு ஆடம்பர பொருட்கள் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான நேரம். கண்ட கச் சனியின் காலம் என்பதால் மன சஞ்சலத்தால் எடுக்கும் முடிவுகள் தவறாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.முக்கிய முடிவுகளை பல முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும். சுய ஜாதகத்தின் தசைபுக்திக்கு ஏற்ப தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம். 5.12.2026 அன்று லாப ஸ்தானத்திற்கு கேது செல்கிறார். கேது தான் நின்ற பாவக பலனை குறைப்பார். எனவே சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். குருபகவான் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்பவர்களுக்கு அள்ளித் தருவார்.முதலீடு மிகுதியாக போட்டு ஒப்பந்தத் தொழில் செய்பவர்களுக்கு கிள்ளிக் கொடுப்பார்.கமிஷன் அடிப்படையிலான தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்ட வருமானத்தை தருவார். பலர் கடன் சுமை தாளாமல் மீள நல்ல வழி தென்பட்டதாக நினைத்து தவறான புதிய தொழில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பின் நாளில் வருந்தலாம்.

அரசியல்வாதிகள்

சட்டம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காலம் என்பதால் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என பிரச்சனைக்கு சம்பந்தம் பெற்ற நபருடன் நேரடியாக பேசி சமரசம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

உங்கள் இஷ்ட,குல தெய்வத்தின் மேல் நம்பிக்கை வைத்து இந்த குருப் பெயர்ச்சியை கடப்பது சிறப்பு. குருவின் வக்ர காலத்தில் இருண்ட குகையில் இருப்பவர்களுக்கு லேசான சூரிய வெளிச்சம் கிடைத்தது போன்ற உணர்வு இருக்கும்.கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி குறையும்.தேவைக்கு மிஞ்சிய வருமானம் கிடைக்கும்.

பரிகாரம்

தினமும் திருக்கோளாற்று பதிகம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஒலிக்கச் செய்து கேட்க வேண்டும். எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மையாகும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X