

திட்டம் தீட்டி வெற்றி பெற வேண்டிய வாரம். ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு சூரியன் மற்றும் குருவின் பார்வை உள்ளது. தெய்வ அனுகூலம் தற்போது கிடைக்கப் பெறுவதால் சுய ஜாதக ரீதியான அனைத்து விதமான தோஷங்களும் சாபங்களும் விலகும். தடைபட்ட அனைத்து இன்பங்களும் மீண்டும் வந்து சேரும். கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் ஓடி வந்து நிற்கும். இனம் புரியாத நோய் தாக்கம், மனசஞ்சலம் பயம் அகலும்.புதியதாக பிறப்பெடுத்தது போன்ற உணர்வு மேலோங்கும். தற்போது சுமார் 135 நாட்கள் சனிபகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கப் போவதால் ராசியில் பதிந்த சனி பகவான் தாக்கம் வெகுவாக குறையும். தடைபட்ட தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலமாக இருக்கும். குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.தொழிலில் வருமானம், லாபம் அதிகமாக இருப்பதால் உழைக்கும் ஆர்வம் அரிகரிக்கும். தொழில் மாற்ற சிந்தனை ஏற்படும். இழுபறியாக இருந்த முயற்சிகள் இப்பொழுது பலிதமாகும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். நாக சதுர்த்தியன்று சர்ப்ப வழிபாடு செய்யவும்.