

தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தனது மற்றொரு வீடான துலாம் ராசியில் புதனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். நல்ல தோற்றம், நிறைந்த நிம்மதி, சிந்தித்து செயல்படும் திறன், ஒரு கூட்டத்தை வழி நடத்தும் திறமை ஆகியவை ஏற்படும். எதிர்மறை சிந்தனைகள் விலகும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய சொந்த தொழில் துவங்கும் எண்ணம் தோன்றும். நிறைந்த ஆரோக்கியம், ஆடம்பரமான, அந்தஸ்தான வாழ்க்கை, தாயின் அன்பு, அரவணைப்பு, அதிகப்படியான சொத்து சேர்க்கை, கால்நடை பாக்கியங்கள், சொத்துகள் மூலம் வாடகை, விவசாய வருமானம் ஆகிய சுப பலன்கள் நடக்கும். ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சினை முடிவுக்கு வரும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தாய் மாமாவுடன் ஏற்பட்ட மனச்சங்கடம் மாறும். திருமணத் தடை அகலும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மகாளய பட்ச காலத்தில் சுமங்கலி பெண்களுக்கு தான தர்மம் வழங்கவும்.