ரிஷபம்- 2026 வார ராசிபலன் 23.8.2026 முதல் 29.8.2026 வரை

வருமான பற்றாக்குறையை அகற்ற புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
Rishabam
Published on

ரிஷபம்

மனக்கவலைகள் குறையும் வாரம். ராசி அதிபதி சுக்கிரனுக்கு சனி மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. மனதாலும் உடலாலும் பட்ட வேதனைகள் தீரும் காலம். தன்னம்பிக்கை, தைரியம், சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறு போன்ற பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும். சகோதர, சகோதரிகளுக்காக பணம் செலவு செய்வீர்கள். திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். எதிரிகளை வென்று ஏற்றமடைவீர்கள். வேடிக்கை, விநோதங்கள், பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு சென்று மனம் நிம்மதியை அதிகரிப்பீர்கள். வயோதிகர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். வருமான பற்றாக்குறையை அகற்ற புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். புதிய வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். 25.8.2026 அன்று அதிகாலை 3.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குழப்பமான மனநிலை பய உணர்வு உண்டாகும். பிரயாணங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. முக்கியமான ஆவணங்கள் ஆபரணங்களை கவனமாக கையாள வேண்டும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com