

கவுரவமான உத்தியோகம் கிடைக்கும் வாரம். ராசி மற்றும் 6ம் அதிபதி சுக்ரன் வக்ர கதியில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் பெறுவதால் கவுரமான அரசு வேலை கிடைக்கும். தந்தையின் உடல் நலன் முற்றிலும் நலம் பெறும். வெளியூர், வெளிநாட்டில் வசிப்பவர்கள் தீபாவளிக்கு பூர்வீகம் வந்து செல்ல வாய்ப்புள்ளது. இடப் பெயர்ச்சியால் நல்ல பலன்கள் ஏற்படும். தொழிலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு உங்களை உற்சாகப்படுத்தும். புதிய சொத்துச் சேர்க்கை ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சுப விரய செலவுகள் வீடு தேடி வரும். பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க கடுமையாக உழைப்பீர்கள். சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். பருவ வயது பிள்ளைகளை பெற்றோர்கள் நேரடி கவனிப்பில் வைப்பது நல்லது. வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு தூக்கம் குறையும். இன்பமும், துன்பமும் இணைந்த காலகட்டமாகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றவர்களுக்கு இனிப்பு தானம் வழங்கவும்.