ரிஷபம்- 2026 வார ராசிபலன் 11.10.2026 முதல் 17.10.2026 வரை

மனக்குழப்பம், பதட்டம் அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
Rishabam
Published on: 

ரிஷபம்

தனவரவு தாராளமாக இருக்கும் வாரம். ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக ஸ்தான அதிபதி சூரியன் சனி பகவானின் பார்வையில் சஞ்சரிக்கிறார். பண வரவில் நிலவிய ஏற்ற இறக்கம் சுமூகமாகும். அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாகும் என்பதால் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. தந்தைவழி உறவினர்களால் லாபம் கிடைக்கும். இதுவரை வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். மதிப்பும், மரியாதையும் காப்பாற்றப்படும். நினைப்பதெல்லாம் நடக்கும். திருமணம், குழந்தை பேறு உண்டாகும். மத்திம வயதினருக்கு மருமகன், மருமகள் பேரன், பேத்தி என புதிய உறவு கிடைக்கும். வயது முதிர்ந்தவர்கள் தொழில் உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு ஓய்வு பெறுவார்கள். 16.10.2026 அன்று காலை 6.47க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்குழப்பம், பதட்டம் அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நவராத்திரி காலங்களில் அம்பிகைக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com