

புதிய பாதையில் பயணிக்கத் துவங்கும் வாரம். ராசிக்கு உச்ச குருவின் ஐந்தாம் பார்வை உள்ளது. சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் வாழ்வில் அடைய வேண்டிய அனைத்து நன்மையையும் பாக்கிய ஸ்தான குரு உங்களுக்கு வழங்குவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.நல்லோர் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பும் அமோகமாக அமைய குருபகவான் ஆசி புரிவார். தற்போது குரு பகவான் உங்களை புனிதப்படுத்த போகிறார். பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் தீராத தீர்க்க முடியாத நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். உயர்கல்வி முயற்சி கைகூடும். திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும். பணவரவு பல வழிகளில் மிகுதியாக இருக்கும். குல தெய்வ, குடும்ப தெய்வ இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். பிராயணங்களால் ஆதாயம் உண்டு. கருட பஞ்சமி அன்று விரதம் இருந்து பால் அபிஷேகம் செய்து சர்ப்ப வழிபாடு செய்யவும்.